உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு திருக்கல்யாணம்

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 12 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் மண்டகப்படி நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பூரண புஷ்கலா தேவி, சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கிராமத்தார்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஸர்ப்ப வாகனத்தில் சுவாமி வீதியுலா வந்தார். 6ம் திருவிழாவான இன்று இரவு கழுவன் திருவிழா நடக்கிறது. மே 20ஆம் தேதி தேரோட்டமும், 21ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !