சபரிமலையில் புனிதமான 18ம் படிக்கு படிபூஜை; பக்தர்கள் பரவசம்
ADDED :514 days ago
சபரிமலை; வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று புனிதமான பதினெட்டாம் படிக்கு படிபூஜை நடந்தது.
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். விழாவில் நேற்று புனிதமான பதினெட்டாம் படிக்கு படிபூஜை நடந்தது. சரணகோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.