உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை., முத்தாரம்மன் கோயிலில் ரூ.28,59,275 உண்டியல் வசூல்

குலசை., முத்தாரம்மன் கோயிலில் ரூ.28,59,275 உண்டியல் வசூல்

உடன்குடி; குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில், 28 லட்சத்து 59 ஆயிரத்து 275 ரூபாய் வந்துள்ளது. குலசேகரன்பட்டணம், முத்தாரம்மன் கோயிலில் 13 நிரந்தர உண்டியல் எண்ணிக்கை நடந்தது. சங்கரன்கோவில், சங்கரநாராயணன் சுவாமி கோயில் துணை ஆணையர் கோமதி தலைமையில், உண்டியல் எண்ணிக்கை நடந்தது. 42 நாட்கள் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய காணிக்கை எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பக்தர்கள் 28 லட்சத்து 59 ஆயிரத்து 275 ரூபாய் ரொக்கமாக செலுத்தியுள்ளனர், தங்கம் 53 கிராம் 500 மி.கிராம், வெள்ளி 670 கிராம் 200 மி.கிராம் கிடைத்துள்ளது. இதில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேஸ்வரி, ஆய்வாளர் பகவதி, அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் கணேசன், மகாராஜன், கோயில் கணக்கர் டிமிட்ரோ ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !