பாலசமுத்திரம் முத்தாலம்மன் கோவில் விழா
ADDED :553 days ago
பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரத்தில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. பழநி, பாலசமுத்திரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறுகிறது இதில் முக்கிய நிகழ்ச்சியான அம்மன் திருவுலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலசமுத்திர முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலமாக எடுத்து வரப்படும். பல்வேறு பல்வேறு சமூகங்களில் மண்டகப்படி நடைபெறும். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் பெண்கள் மாவிளக்கு முளைப்பாரி ஆகிவற்றை ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு செய்தனர். பழநி, ராமநாதன் நகரில் உள்ள சுவாமி கொலுவிருக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மஞ்சள் நீராடுதலும் விழா நிறைவடையும்.