பழநியில் கிரிவலம் வந்த கோயில் காளை
ADDED :553 days ago
பழநி; பழநியில் கோயில் காளை அலங்காரத்துடன் பக்தர்கள் கிரிவலப் பாதையில் அழைத்து வந்தனர்.
பழநியில் வைகாசி விசாக திருவிழா நடைபெறும் நிலையில் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மணக்கடவு பகுதி பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மணக்கடவு வீரக்குமார் சுவாமி கோயில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரி வீதி வலம் வந்தனர். பாதயாத்திரை வந்த பக்தர்கள் மலைக்கோயில் தரிசனம் செய்து திரும்பினர்.