கள்ளிமடை காமாட்சி அம்மன் கோவிலில் அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :608 days ago
கோவை; சிங்காநல்லூர் கள்ளிமடை பகுதியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.விழாவில் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் அம்மனை வேண்டி அலகு குத்திக்கொண்டு கோவை நகர வீதிகளில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.