உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி
ADDED :582 days ago
உடுமலை; உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே, உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.