உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் வழிபாடு

சென்னை கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாகம் வழிபாடு

சென்னை ; வைகாசி விசாகம் முன்னிட்டு சென்னை கந்தகோட்டம் முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கந்தகோட்டம் முருகன் கோயில் சென்னையில் பாரிமுனை பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலில், தை திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம் விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோயிலில் சிறப்ப வழிபாடு நடைபெற்றது. மூலவர் கந்தசுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !