அகரமாங்குடி கைலாசநாதர் கோயிலில் வைகாசி விசாக திருக்கல்யாணம்
ADDED :540 days ago
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அகரமாங்குடியில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்பாள், சமேத கைலாசநாதர் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஏகதின லட்சார்ச்சனை மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெருமாள் சீர் வரிசையுடன் சிவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இரவு வான வேடிக்கையுடன் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகளின் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை கோவில் செயல் அலுவலர் விக்னேஷ், கோவில் நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.