திருப்பதியில் நரசிம்ம ஜெயந்தி; வசந்த மண்டபத்தில் சிறப்பு வழிபாடு
ADDED :604 days ago
திருப்பதி; வைசாக மாத பெருவிழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ நரசிம்மரின் பிறந்தநாளை முன்னிட்டு, திருமலை வசந்த மண்டபத்தில் ஸ்ரீ நரசிம்ம பூஜை இன்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று (22ம் தேதி) மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்ம வாகனத்தில் நரசிம்மர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜையின் ஒரு பகுதியாக ஸ்ரீ நரசிம்ம மந்திரம் 108 முறையும், ஸ்ரீ நரசிம்ம அஷ்டோத்தர ஷதநாமாவளி மற்றும் ஸ்ரீ சுதர்சன மந்திரம் 24 முறையும் பாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஒளிபரப்பியது.இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவாரி கோவில் அர்ச்சகர்கள், தர்மகிரி வேதவிஞ்ஞான பீடத்தின் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.