பட்டத்தரசி அம்மன் கோவில் சக்தி கரகம் ஊர்வலம்
ADDED :538 days ago
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே வண்ணான் கோவில் பிரிவில் உள்ள பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி பூச்சாட்டு, கம்பம் நடும் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து அக்னி கரகம் அழைத்தல், அலங்கார பூஜை, மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.