யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சுதர்சன நரசிம்ம ஹோமம்
ADDED :473 days ago
கமுதி; கமுதி குண்டாறு எட்டுக்கண் பாலம் அருகே உள்ள யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை, விஷ்வக் சேனர் பூஜை, சுதர்சன நரசிம்ம ஹோமம், பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. யோகா நரசிம்ம பெருமாளுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர்,பன்னீர் உட்பட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் கமுதி சுற்றியுள்ள மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.