கிருஷ்ணகிரி லட்சுமி நரசிம்ம கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :472 days ago
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 38வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 15ல் துவங்கியது. 16ல் அன்னபட்சி வாகனம், 17ல், சிம்ம வாகனம், 18ல், ஆஞ்சநேயர் வாகனம், 19ல் சேஷ வாகனம், 20ல், திருக்கல்யாணம், 21ல் நரசிம்ம ஜெயந்தி, இரவு யானை வாகனத்திலும், நரசிம்மர் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 22 காலை ரதோற்சவம், 23 காலை பிரகார உற்சவம், இரவு குதிரை வாகனத்தில் நகர் வலம் நடந்தது. நேற்று காலை அபிஷேகம், பிரகார உற்சவம், சூரிய பிரபா வாகனத்தில் நகர் வலமும், இரவு சந்திர பிரபா வாகனத்தில் நகர் வலமும் நடந்தது. இன்று காலை வசந்த உற்சவம், இரவு புஷ்ப பல்லக்கில் நகர் வலம் நடக்கிறது. நாளை சயன உற்சவம், 27ல் ஊஞ்சல் உற்சவம் நடக்க உள்ளது.