உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசை முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, வைகாசி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 8 மணிக்கு காலசந்தி பூஜை நடந்தது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் அர்ச்சகர் குமார் பட்டர் விளக்கு பூஜையை நடத்தினார். மூலஸ்தான தீபாராதனை நடந்தது. இதில் குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !