தென்காசியில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வி
ADDED :4796 days ago
தென்காசி: தென்காசியில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வி நடந்தது.தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வேங்கடசுப்பிரமணியன் சார்பில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வி நடந்தது. செல்வராஜ் தலைமை வகித்தார். சங்கிலிரத்னம் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் கழக செயலாளர் சிவராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.சண்முகசுந்தரம், தீத்தாரப்பன், கிருஷ்ணன், சந்திரசேகரன், ராஜேந்திரன், அகமதுஷா, வீரபுத்திரன், ஈஸ்வரன், குத்தாலிங்கம், வீரவராசா, சுடலைமுத்து, சதாசிவம், சுப்பிரமணியம், ஆய்க்குடி கிளாங்காடு வரதயன் கிராமம் சுப்பிரமணி சேரிடரி டிரஸ்ட் மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த நிகழ்ச்சிக்கு பழனியப்பன் தலைமை வகித்தார். துணை செயலாளர் குத்தாலிங்கம் அறிக்கை வாசித்தார். அம்பை ராமச்சந்திரன் ஆய்வுரையாற்றினார். துணை செயலாளர் தீர்த்தாரப்பன் நன்றி கூறினார்.