அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐகோர்ட் தலைமை நீதிபதி தரிசனம்
ADDED :516 days ago
திருவண்ணாமலை, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி.கங்காபுர்வாலா கடந்த, 23 ல் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து மூத்த நீதிபதியான மகாதேவன் என்பவரை பொறுப்பு நீதிபதியாக நியமித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இதையடுத்து அவர் கடந்த, 2 நாட்களுக்கு முன்பு பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். நேற்று அவர், அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட நீதிபதி மதுசூதனன், கோவில் இணை ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் வரவேற்று, கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.