உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

ஸ்ரீகாளஹஸ்தி; சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் சங்கடஹர சதுர்த்தி, கோடை விடுமுறை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதைக் கவனித்தில் கொண்ட கோயில் செயல் அலுவலர்  பக்தர்கள வெங்கடேசு, பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தணிக்கும் வகையில் மோர் விநியோகித்தார். பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் சுமார் வரிசைகளில் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை நீடித்தது இதற்காக கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர். இன்று கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விரதப் பூஜையில் காலையும் மாலையும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . மாலை விநாயகர் ( உற்சவ மூர்த்தி) மூஷிக வாகனத்தில் மாட் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் உட்பட கோயில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !