உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கல்லுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

திட்டக்குடி; ராமநத்தம் அடுத்த கல்லுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.

ராமநத்தம் அடுத்த கல்லுார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 3மணிக்கு தேர் திருவிழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கல்லுார் மற்றும் சுற்றுப்புற கிராமப்புற மக்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். தொழிலாளர் நலன்வாரிய செயற்குழு உறுப்பினர் சங்கர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கிராமத்தின் அனைத்து வீதிகளின் வழியாக அம்மன் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் விழாவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !