உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலம்புரி ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

வலம்புரி ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் வாராகி பீடம் ஆலய வளாகத்தில் வலம்புரி ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

இங்கு, 11 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, 5.00 மணிக்கு தொடங்கின. கூடலூர் கவுண்டம்பாளையம் மாரியம்மன் திருக்கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த யாக சாலையில் முதல் கால வேள்வி, தீபாராதனைகள் நடந்தன. சனிக்கிழமை காலை இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்விகள், கோபுர கலசம் மற்றும் மூர்ஷிக வாகனத்துக்கான அஷ்டபந்தன எந்திர ஸ்தாபனங்கள் நடந்தன.

நேற்று காலை, 5.00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி நடந்தது. பின்னர், புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்கள், கோவிலை சுற்றி, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, காலை, 8.00 மணிக்கு கோபுர கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை வாராகி மணிகண்ட சுவாமிகள் நடத்தி வைத்தார். தொடர்ந்து, அன்னதானம், சிவ வாத்திய நிகழ்ச்சி, பஜனைகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, விநாயகரை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !