/
கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம்கள்; கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை தந்தனர்
விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம்கள்; கும்பாபிஷேகத்திற்கு சீர் வரிசை தந்தனர்
ADDED :562 days ago
காங்கேயம்; காங்கேயம் அருகே விநாயகர் கோவில் கட்ட நிலம் வழங்கிய முஸ்லிம்கள், கும்பாபிஷேக விழாவுக்கு, சீர்வரிசை வழங்கினர்.
போதிய இடம் இல்லாத நிலையில், அதே பகுதியில் ஆர்.எம்.ஜே.ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான, மூன்று சென்ட் நிலத்தை, இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வழங்கினர். இதன் மதிப்பு ஆறு லட்சம் ரூபாய். இதையடுத்து கோவில் கட்டும் பணி நடந்து முடிந்தது. நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சீர்வரிசை பொருட்களை எடுத்து, ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்கினர். விழாவில் அன்னதானமும் வழங்கினர்.