உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திர நிறைவு; அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலச வைத்து தோஷ நிவர்த்தி பூஜை

அக்னி நட்சத்திர நிறைவு; அருணாசலேஸ்வரர் கோவிலில் 1008 கலச வைத்து தோஷ நிவர்த்தி பூஜை

திருவண்ணாமலை ; அக்னி நட்சத்திர நிறைவை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில் தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

அக்னி நட்சத்திர நிறைவை யொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 1008 கலச  வைத்து முதல் கால யாகம்  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !