பராமரிப்பு இல்லாமல் பாழாகி வரும் நூற்றுக்கால் மண்டபம்: பக்தர்கள் வேதனை
மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் கட்டப்பட்டுள்ள நூற்றுக்கால் மண்டபம் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைவதால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டபத்தின் மகிமை மறைய ஆரம்பித்துள்ளது.திருவாதவூரில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் உள்ளது. இவ் ஊரில் பிறந்த மாணிக்க வாசகருக்கு கோயிலினுள் சிவபெருமான் மாணிக்கவாசகருக்கு தனது திருப்பாதத்தை காட்டியும், பாதசிலம்பொலி காட்டிய இடத்தில் சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய அழகிய நூற்றுக்கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இம் மண்டபத்தை அறநிலையத்துயிைனர் முறையாக பராமரிக்காமல் மண்டபங்களின் மேல் பகுதியில் அரச மரம் முளைத்துள்ளது. அதனால் கலைநயம் மிக்க மண்டபத்தின் கற்கள் பெயர்ந்தும் வெடிப்பு ஏற்பட்டு, கொடுங்கைகள் சிதிலமடைவதோடு சிற்ப வேலைபாடுகள் அழிந்து வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்பதே தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களின் எதிர்பார்ப்பாகும். நிர்வாகத்தினர் கூறுகையில்," பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.