உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

திருமுருகன்பூண்டி வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

அவிநாசி; திருமுருகன்பூண்டி வி.ஜீ.வி. ஸ்ரீ கார்டனில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. முதலாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூப்பிடு பிள்ளையார் கோவிலிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதன் பின்னர் கணபதி ஹோமம், சங்காபிஷேகம், வெற்றி விநாயகருக்கு அபிஷேக ஆராதனை, மஹா தீபாராதனை நடைபெற்றது. கோவில் கமிட்டி மற்றும் வி.ஜீ.வி. ஸ்ரீ கார்டன் மக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !