மேலும் செய்திகள்
குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
468 days ago
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஏடு எதிரேறிய விழா
468 days ago
கரூர்; கரூர் மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த, 12ல் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. பிறகு நாள்தோறும் இரவு, பல்வேறு சிறப்பு வாகனங்களில் உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்து வருகிறது. கடந்த, 17ல் பூச்சொரிதல் விழா, 19ல் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கோவிலில் தேரோட்டம் நடந்தது. அப்போது, பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள், அமராவதி ஆற்றில் அலகு குத்தி கொண்டும், அக்னி சட்டி எடுத்து கொண்டு ஊர்வலமாக, மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். இன்று இரவு, சிறப்பு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. நாளை மாலை, 5:30 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பக்தர்கள் கூட்டம் கடந்த நான்கு நாட்களாக அதிகரித்து வருவதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூன், 6ல் பஞ்ச பிரகாரம், 7ல் புஷ்ப பல்லக்கு, 8ல் ஊஞ்சல் உற்சவம், 9 ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
468 days ago
468 days ago