உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி குரு சித்தானந்த சுவாமி கோவில் 187 ஆம் ஆண்டு குருபூஜை விழா

புதுச்சேரி குரு சித்தானந்த சுவாமி கோவில் 187 ஆம் ஆண்டு குருபூஜை விழா

புதுச்சேரி; புதுச்சேரி கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவில் 187 ஆம் ஆண்டு குருபூஜை விழாவில் சித்தானந்த சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், 28 ம் தேதி குரு பூஜை விழா நடைபெற்றது. கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், குரு சித்தானந்த சுவாமியின் 187 வது ஆண்டு குரு பூஜை விழா, நேற்று 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இன்று (28ம் தேதி) காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு மகா அபிஷேகம், பூரணாஹூதியை தொடர்ந்து,  காலை 9:30 மணிக்கு, கலச புறப்பாடு, சுவாமிக்கு கலசாபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனை நடைபெற்றது. சித்தானந்த சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குருபூஜை விழாவில் கோவிலில் உள்ள விநாயகர் சந்தன காப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு தீபாரதனை, இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !