உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செப்பறை தானப்பசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

செப்பறை தானப்பசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி; நெல்லையை அடுத்த செப்பறை தானப்பசுவாமி கோயிலில் 12வது ஆண்டு வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, எஜமானவர்ணம், கும்பபூஜை, ருத்ரம், சமகம் சூக்தாதி ஜெபம், கணபதி ஹோமம், சுதர்ஸனஹோமம், அகோர ஹோமம், ஷேத்ரபாலகர் ஹோமம், பூர்ணாஹூதி மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடந்தது. பூஜைகளை ராஜாமணி பட்டர் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !