வேடசந்தூர் மாரியம்மன் கோயிலில் தீக்குழி இறங்கும் விழா
ADDED :831 days ago
வேடசந்தூர்; வேடசந்தூர் மாரியம்மன் கோயிலில், வைகாசி திருவிழா சிறப்பாக நடந்தது. நிகழ்வின் துவக்க விழாவாக கம்பம் அலங்கரித்து நகர் வலம் வருதல், கரகம் பாவித்தல், வான வேடிக்கை, அக்கினி சட்டி எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் வருதல் என சிறப்பாக நடைபெற்ற விழாவில் நேற்று மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. திரளான மக்கள் பங்கேற்றனர். இன்று மாலை மஞ்சள் நீராட்டுடன் கம்பம் ஆற்றுக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.