சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க நிறுவனர் யாசகம் பெற்று வழிபாடு
ADDED :525 days ago
பழநி; பழநியில் சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் சார்பில் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகவும் தமிழகத்தில் பா.ஜ சார்பில் போட்டியிட்ட அனைத்து உறுப்பினர்களும் வெற்றி பெற வேண்டி கோயில் முன் யாசகம் கேட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பழநியில் சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்கம் சார்பில் இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி வெற்றி பெற வேண்டியும், தமிழகத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை உட்பட நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து பா.ஜ., வேட்பாளர்களும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற கோரிவிடுத்து, சஷ்டி சேனா ஹிந்து மக்கள் இயக்க நிறுவனர் சரஸ்வதி, திருஆவினன்குடி கோயில் முன்பு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து பக்தர்களிடம் யாசகம் வாங்கி கோவில் உண்டியலில் செலுத்தினார்.