பிப்.23ல் வீடுகள், வீதிகள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவச பாராயணம் செய்யுங்கள்; ஜீயர் வேண்டுகோள்
ஸ்ரீவில்லிபுத்துார்; பிப்ரவரி 23 மாலை 6:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் இந்துக்கள் ஒவ்வொருவரும் அவர்களது வீடுகள், வீதிகள், கோயில்கள் தோறும் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டுமென ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபர் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது காணொளி பேச்சு; வருகிற பிப். 23 அன்று கார்த்திகை நட்சத்திரமும், சஷ்டி திதியும் ஒருசேர வருகின்றது. அன்றைய தினம் நாம் அனைவரும், உலகில் வசிக்கும் அனைத்து இந்து மக்களும் ஒன்று சேர்ந்து திருப்பரங்குன்றம் துாணில் தீபம் ஏற்றுவதற்காக கந்த சஷ்டி கவசம் பாராயணத்தை மாலை 6:00 மணிக்குமேல் 8:00 மணிக்குள் அவரவர் வீடுகளில், தெருக்களில், வீதிகளில், கோயில்களில் அனைவரும் தீபமேற்றி இந்தியா முழுவதும் மக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும், இந்துக்கள் ஒற்றுமையாக இருப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கூடியிருந்து ஆண்டாள் சாதித்தது போல் பாராயணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கு நாம் நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றிகரமாக முடியும். இந்து மக்களிடையே ஒற்றுமை நிலவும். எதிரிகள் எல்லாம் அழிவார்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இந்துக்கள் ஒவ்வொருவரும் அவர்களது வீட்டிலும், வீதிகளிலும் கந்த சஷ்டி பாரயணத்தை சேவித்து அருள் பெறும்படி கேட்டுக்கொள்கிறோம்.