உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் தாராபிஷேகம் பூஜை

நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் தாராபிஷேகம் பூஜை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் தாராபிஷேகம் பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் தாராபிஷேகம் எனும் அக்னி நட்சத்திரம் வெய்யிலின் தாக்கத்தை குறைக்க வேண்டி அக்னி நிறைவு நாளன்று நடத்தும் யாகம் நடந்தது. கணபதி ஹோமம் நடத்தி 108 கலசங்களில் புனிதநீர் நிரப்பி யாகம் நடத்தினர். பூலோகநாதருக்கு 21 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்துகலசாபிஷேகம் செய்தனர். பூலோகநாதரும், புவனாம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பூஜைகளை குமார், ஹரிபிரபோ, முருகானந்தம் குருக்கள் செய்தனர். பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !