திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தரிசனம்
ADDED :597 days ago
திருப்பதி; திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகத்தின், திருமயம் பைரவர் கோயிலில் தரிசனம் செய்தார், அதைத்தொடர்ந்து இன்று ஆந்திர மாநிலம் சென்ற அமித் ஷா திருப்பதியில் தரிசனம் செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது; ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசிப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளால் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டுகிறேன் என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.