வைகாசி சோமவாரம்; ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :829 days ago
கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் வைகாசி 3வது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் ஆபத் சகாய வில்வ லிங்கேஸ்வரர் சன்னிதியில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனை தரிசனம் செய்தனர்.