உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுப்பாளையம் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

புதுப்பாளையம் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

கரூர் ; குளித்தலை அருகே புதுப்பாளையத்தில் பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வைகைநல்லூர் ஊராட்சி, புதுப்பாளையத்தில் பகவதி அம்மன், மகா மாரியம்மன், காளியம்மன், விநாயகர், மாசி பெரியண்ணசாமி, மலையாளசாமி,  வீர மலையாண்டி, பட்டக்காரன் தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. புதிதாக கோவிலை நிர்ணயம் செய்யும் பொருட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றன. தற்போது கோவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து இன்று கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த மே 31ம் தேதி குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் யாக வேள்வி சாலையில் வைத்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து பூஜை, லட்ச்சார்ச்சனை, நாடி சந்தனம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். இன்று காலை 4ம் கால யாக வேள்வி முடிவடைந்ததும் புனித நீர் கும்பத்தினை சிவச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்க்கு புனித நீரினை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு அர்ச்சனை,  ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த கும்பாபிஷேக விழாவில் புதுப்பாளையம், கோட்டமேடு, வைகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 1000க்கும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !