சித்தி விநாயகருக்கு 108 இளநீர் அபிஷேகம்
ADDED :534 days ago
காஞ்சிபுரம்; அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ல் துவங்கி, 28ல் நிறைவு பெற்றது. கத்திரி வெயில் முடிந்தும், காஞ்சிபுரத்தில், 42.2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், ஆடிசன்பேட்டை தெருவில் உள்ள சகல சித்தி விநாயகர் கோவிலில் நேற்று கத்திரி வெயில் நிவர்த்தி அபிஷேகம் நடந்தது. இதில், மூலவருக்கு 108 இளநீர், பன்னீர், தேன், விபூதி, உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.