சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி தேரோட்டம் கோலாகலம்
ADDED :533 days ago
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் இன்று நடந்தது.
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை மாதங்களில் 11 நாட் கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைகாசிதிருவிழா 24ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (ஜூன் 3ல்) திங்களன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.