ஹார்விபட்டி பாண்டுரங்கன் கோயிலில் வருடாபிஷேகம்
ADDED :533 days ago
திருப்பரங்குன்றம்; மதுரை ஹார்விபட்டி ஹரி பஜனை கூட பாண்டுரங்கன் கோயிலில் வருடாபிஷேகம், திருக்கல்யாணம் நடந்தது. அதிகாலையில் லட்சுமி நாராயண ஹோமம், சுதர்சன ஹோமம், பரிவார ஹோமம் நடந்தது. மூலவர்கள் உலகளந்த கண்ணன் பாண்டுரங்கன் ருக்குமாயிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. உற்ஸவர்கள் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாஸ பெருமாள் கல்யாண அலங்காரத்தில் எழுந்தருளினர். பூஜைகள், திருக்கல்யாண சம்பிரதாயங்கள் முடிந்து திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.