வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ADDED :531 days ago
வடமதுரை; வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், தென்னம்பட்டி நந்தீஸ்வரன் கோயில், சிங்காரக்கோட்டை நாகநாத சுவாமி கோயில், அய்யலுார் களர்பட்டி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருமஞ்சனம், சந்தனம், இளநீர், பன்னீர், பால், வீபதி உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.