உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்று பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி பெற்று பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்

வடமதுரை; வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூசாரியிடம் சாட்டையடி பெற்றும் வினோத நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.

வடமதுரை வி.குரும்பபட்டியில் எல்லம்மாள், ஐனேரியம்மாள், கருப்புச்சாமி கோயில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் வைகாசி உற்ஸவ திருவிழா துவங்கியது. சுவாமி கரகங்கள் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக பல நாட்கள் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் கோயில் முன்பாக அமர்ந்திருந்தனர். கோயில் பூஜாரி ஆறுமுகம் பாரம்பரிய வழிபாடுகளை முடித்த பின்னர் வரிசையாக பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் தலா ஒரு சாட்டையடி பெற்ற பின்னர் கோயிலுக்குள் சென்று வழிப்பட்டனர். வினோத வழிபாட்டை காண சுற்றுப்பகுதி மக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். விழா ஏற்பாட்டினை குரும்ப கவுண்டர் சமூகத்தின் லகும, சித்த, லக்கையா வம்சத்து பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !