உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார நட்சத்திரம்

சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகள் அவதார நட்சத்திரம்

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் திருக்கோஷ்டியூர் நம்பிகளின் 1038 வது அவதார திருநட்சத்திர உத்ஸவம் நடந்தது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலின் மூலவருக்கு ‛எம் பெருமனார் ’ என்ற திருநாமத்தைச் சூட்டியவர் திருக்கோஷ்டியூர் நம்பிகள். இவரது அவதார திருநட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று நாள் உத்ஸவம் நடந்தது. நேற்று 3ம் நாள் காலை 8:00 மணிக்கு உற்ஸவ நம்பிகள் பெருமாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றார். தொடர்ந்து தாயார், ஆண்டாள் சன்னதி எழுந்தருளி மங்களாசாசனம் பெற்றார். பின்னர் தொடர்ந்து திருவீதி புறப்பாடு நடந்தது. பின்னர் நாலாயிர திவ்ய பிரபந்த சாற்று முறை, தீர்த்த கோஷ்டி  நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !