உலக நன்மைக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தில் 1,116 சிவலிங்க பூஜை
ADDED :594 days ago
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கர மடத்தில், மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன், ஆந்திர பக்தர்களால் 1,116 சிவலிங்கம் வைக்கப்பட்டு உலக மக்கள் நன்மைக்காக நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1,116 சிவலிங்கங்களுக்கும் பல்வேறு மலர்கள், வில்வம் உள்ளிட்டவையை சமர்ப்பித்து, சிறப்பு தீபாராதனை செய்தார். அதை தொடர்ந்து பக்தர்கள் சமர்ப்பித்த ஏலக்காய் மற்றும் பூமாலைகளை, சுவாமிகள் ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தொடர்ந்து மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்துக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.