உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் பிரதமர் மோடி முகமூடி அணிந்து முடிக்கணிக்கை

பழநி கோயிலில் பிரதமர் மோடி முகமூடி அணிந்து முடிக்கணிக்கை

பழநி; பழநி கோயிலில் பாரதப் பிரதமர் மோடி முகமூடி அணிந்து சஷ்டி சேனா நிறுவனர் சரஸ்வதி முடிக்காணிக்கை செலுத்தினார். பழநி கோயிலுக்கு சஷ்டி சேனா நிறுவனர் சரஸ்வதி வருகை புரிந்தார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை அடுத்து திருஆவினன்குடி அருகே உள்ள பழநி கோயிலுக்கு சொந்தமான காணிக்கை மண்டபத்தில் முடி காணிக்கை செலுத்தினார். முடி காணிக்கை செலுத்தும் சமயத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உருவம் பொறித்த முகமூடி அணிந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !