ஆழம் தெரியாமல்...
ADDED :591 days ago
எல்லா விலங்குகளுக்கும் கேட்கும்படி சத்தமாக கர்ஜித்தது சிங்கம். அதற்கான காரணத்தைப் புலி கேட்ட போது, ‘நான் காட்டுக்கு அரசன். அதை நிலைநாட்டவே இப்படி கர்ஜனை செய்கிறேன்’ என்றது சிங்கம். புதருக்குள் நின்றிருந்த முயல், தானும் சிங்கம் போல சத்தமாக குரல் எழுப்பியது. அவ்வழியாக வந்த ஓநாய் அதன் மீது பாய்ந்து உணவாக்க முயன்றது. இந்த முயல் போலத்தான் ஆழம் தெரியாமல் காலை விட்டால் அவதிக்கு ஆளாக நேரிடும்