மதுக்கரை பேச்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :499 days ago
கோவை; மதுக்கரை, வெள்ளலூர் கிராமம் பேச்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்து 7ம் தேதி முதல் நாள் நிகழ்வாக விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்வியம், யாகசாலை பிரவேசம் அதை தொடர்ந்து முதல் கால யாக பூஜை நடைபெற்றது. 8ம் தேதி இரண்டாம் நாள் மூலவர் பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கவசம் பொருத்தும்நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மூன்றாம் நாள் நாள் யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காலை எட்டு முப்பது மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்ப கலசத்திற்கு நீர் ஊற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூலவர் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பேச்சி அம்மனை தரிசனம் செய்தனர்.