பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
நத்தம், நத்தம் அருகே பாப்பாபட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கடந்த ஜூன்.4 கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. பின்னர் நேற்று இரவு அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்தல், அக்னிசட்டி, பால்குடம், கிடாய்கள் வெட்டி தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று கரகம் கண்மாய்க்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை பாப்பாபட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.