வைகாசி வியாழன்; காரமடை ஸ்ரீ ஜெய மாருதி ராகவேந்திரர் கோயிலில் சிறப்பு பூஜை
காரமடை: வைகாசி மாத கடைசி வியாழக்கிழமையில் காரமடை ஸ்ரீ ஜெய மாருதி ராகவேந்திரர் கோயிலில் சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெற்றது.காரமடையிலுள்ள ஸ்ரீ ஜெய மாருதி ராகவேந்திரர் திருக்கோவிலில், ஆராதனை விழா நடந்தது.ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி, 1671 ஆம் ஆண்டு விரோதி வருடம் கிருஷ்ண பட்ச துவிதியை திதியில், ஆந்திராவிலுள்ள கர்ணுால் மாவட்டத்தில் துங்கபத்ரா நதிக்கரையில் ஜீவ சமாதி அடைந்தார். தற்போது மந்திராலயம் என்றழைக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மந்திராலயத்திலிருந்து மிருத்திகா எனும் மண் எடுத்து நாட்டின் பல பகுதிகளில், பிருந்தாவனங்கள் ஏற்படுத்தப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.காரமடை ஸ்ரீ ஜெயமாருதி ஸ்ரீராகவேந்திரர் கோவிலில் வைகாசி மாத கடைசி வியாழக்கிழமையான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாட்டை ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ ராகவேந்திரர் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.