அவிநாசி ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ADDED :562 days ago
அவிநாசி; அவிநாசி அடுத்த ரங்கா நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம், சின்னேரி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ரங்கா நகர் வைஷ்ணவி கார்டனில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ராஜகணபதி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா, விஸ்வநாத சத்யோஜாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக 15ம் தேதி புண்யாகவாசனம், கணபதி ஹோமம்,கோ பூஜை, தீர்த்தக்குடம் எடுத்து வருதல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஸ்ரீ ராஜகணபதி கோவில் கோபுர கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தச தரிசனம், மஹாபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விழா குழுவினர், வைஷ்ணவி கார்டன் பொதுமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.