தொடர் விடுமுறை; ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
ADDED :825 days ago
ராமேஸ்வரம்; விடுமுறை நாளையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இக்கோவிலுக்கு வந்தவர்கள் முதலில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து கடலில் புனித நீராடினர். இதன்பின் கோவில் வளாகத்தில், 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கோவிலில் சுவாமி, அம்மனை தரிசித்தனர்.