நிர்ஜல ஏகாதசி; லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :831 days ago
திருப்பூர்; அவினாசி வட்டம் தாளக்கரை பகுதியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆளி மாத நிர்ஜல ஏகாதசி தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் உற்சவமூர்த்தி நாக ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு லட்சுமி நாராயண பெருமாளை தரிசனம் செய்தனர்.