உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனி சுவாதி; லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

ஆனி சுவாதி; லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் ஆனி மாத சுவாதி வைபவம் நடந்தது.

காரமடை அடுத்த சென்னிவீரம்பாளையத்தில், லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அந்த வகையில் இன்று ஆனி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு வைபவ பூஜைகள் நடந்தன. காலையில் நடை திறந்து பெருமாளுக்கு கலச ஆவாஹனம், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்த பின், அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !