உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலங்கானா மாநில அமைச்சர் தரிசனம்

காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலங்கானா மாநில அமைச்சர் தரிசனம்

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தெலங்கானா மாநில அமைச்சர் உத்தம் குமார் ரெட்டிதனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோயில் அதிகாரிகள் தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் சதீஷ் மல்லி,  நாகபூஷன் நாயக், ரவி, ஸ்ரீநாத், கோயில் ஆய்வாளர் சுதர்சன் கோயில் கண்காணிப்பாளர் நாகபூஷணம் யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !